;
Athirady Tamil News

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை – தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்

0

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகி உயிரிழந்த சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாந்தன் மரணம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர்களும் 32 ஆண்டுகளுக்கு மேலான தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஆனால் சாந்தனால் சட்ட சிக்கல் ஏற்பட்டமையால் இலங்கை செல்லவில்லை.

ஆகவே இவர் திருச்சியில் உள்ள இலங்கை தமிழருக்கான சிறப்பு முகாமில் தங்கியிருந்தார்.

உடல் நல குறைவு காரணமாக நேற்று காலை 7.30 மணியளவில் உயிரிழந்தார்.

இந்நிலையில் இவரது உடலை இலங்கைக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்
சாந்தன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகளான சுரேஷ் குமார், குமரேஷ் பாபு இருவரும் சாந்தனை இலங்கை அனுப்ப அனுமதி வழங்கியது எப்போது என்றும் மத்திய அரசிடம் கேட்டுள்ளார்.

மத்திய அரசு தரப்பில், ஜனவரி 22 ஆம் திகதி அவருக்கு இலங்கைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது என்று கூறியுள்ளனர்.

எனவே 22 ஆம் திகதி அனுமதியளிக்கப்பட்ட பின்னரும் ஏன் இன்றுவரையில் இலங்கைக்கு அனுப்பவில்லை என கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், “ஜனவரி 24ம் திகதி சாந்தன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்போது அவரால் நடக்க கூட முடியவில்லை என்பதற்காகவே இலங்கை அனுப்ப முடியவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

“சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். IAS மற்றும் IPS அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இலங்கை தூதரக அனுமதி, இறப்புச் சான்று உள்ளிட்டவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியது குறித்து மார்ச் 4-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இலங்கை தூரதரக அனுமதி, இறப்புச் சான்றிதழ், பயண ஆவணம், உடலை பதப்படுத்துதல் சான்று ஆகியவற்றை பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவற்றை பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட நான்கு ஆவணங்களும் கிடைத்தவுடன் உடனடியாக உடலை விமானத்தில் அனுப்பிவைப்பதற்கான அனுமதி தாமதமின்றி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.