;
Athirady Tamil News

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்கும் நாடு: உருவாகும் 150,000 வேலை வாய்ப்புகள்

0

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அரபு நாடான சவுதி அரேபியா அமைத்து வருகிறது.

சவுதி தலைநகரான ரியாத்தில் கிங் சல்மான் என்ற இந்த சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

வேலை வாய்ப்புகள்
அதில் சுமார் 57 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட ஆறு ஓடுபாதைகள் அமைக்கப்படவுள்ளன.

அத்துடன், கிங் சல்மான் சர்வதேச விமான நிலையம் அப்பகுதியில் சுமார் 150,000 வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

12 கோடி பயணிகள்
மேலும், 2030 ஆண்டு இந்த விமான நிலையம் திறக்கப்படுமாயின் சுமார் 12கோடி பயணிகள் பயணம் செய்ய ஏற்ற வசதிகள் காணப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு, சவூதி அரேபியாவின் எல்லையை ஒட்டிய யேமனில் மோதல்கள் நடந்து கொண்டிருந்தாலும், ரியாத் போன்ற இடங்கள் பயணத்திற்கு பாதுகாப்பான பிரதேசங்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.