;
Athirady Tamil News

ஒல்லியாக இருப்பதால் ஓட்டுநர் உரிமம் ரத்து.. பிரித்தானிய இளைஞருக்கு ஏற்பட்ட நிலை

0

பிரித்தானியாவில் ஒல்லியாக இருந்ததற்காக ஓட்டுநர் உரிமத்தை இழந்துள்ளார்.

Mirror என்ற ஆங்கில இணையத்தளத்தில் வெளியாகியுள்ள செய்தியின்படி, பிரித்தானியாவில் வசிக்கும் 34 வயதாகும் ஜோ ரோஜர்ஸ் (Joe Rogers) என்பவருக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

அவர் மிகவும் ஒல்லியாக இருந்தார். அதனால் அவர் வாகனம் ஓட்ட தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டு அவரது உரிமம் ரத்து செய்யப்பட்டது.

உண்மையில், 13 வயதிலி இருந்தே அவருக்கு அனோரெக்ஸியா (anorexia) என்ற உணவுக் கோளாறு உள்ளது.

இதனால் உடல் எடை கூடிவிடுமோ என்ற பயம் அவருக்கு எப்போதும் இருந்தது. இதனால் அவரும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். சாப்பிட்ட பிறகும் பலமுறை வாந்தி எடுப்பார்.

இதெல்லாம் ஏன், எப்படி நடந்தது?
இந்தப் பழக்கத்தின் காரணமாக, ரோஜர்ஸ் தொடர்ந்து உடல் எடையைக் குறைத்துக்கொண்டார், இதன் விளைவாக UK போக்குவரத்துத் துறை அவரை வாகனம் ஓட்டத் தகுதியற்றவர் என்று அறிவித்தது.

அவர் எந்த வகையிலும் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, முதலில் உடல்நிலையை மேம்படுத்தி, அதன்பிறகு ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும் என, கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்கபட்டுள்ளது. இல்லாவிட்டால் அவரால் வாழ்க்கையில் கார் ஓட்ட முடியாது.

போக்குவரத்து துறை எடுத்த முடிவை ஏற்று ரோஜர்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

ரோஜர்ஸ் ஊடகங்களிடம் கூறுகையில், அவரது பசியின்மை பற்றி அவரது தாயார் முதலில் அறிந்திருந்தார், அதன் பிறகு அவரது உணவுப் பழக்கம் மாறிவிட்டது.

அம்மாவின் மேற்பார்வையில் அவருடைய உணவுப் பழக்கம் மாறியது மட்டுமல்ல, அது பெரிதும் உதவியது. இதனால் உடல் எடை கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது என்றார்.

தற்போது உடல் மீட்கப்படுவதில் மருத்துவர்களின் முயற்சியும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.