;
Athirady Tamil News

ரஷ்யாவின் ரகசிய படுகொலை திட்டம்! மயிரிழையில் உயிர்தப்பிய ஜெலென்ஸ்கி

0

கருங்கடல் துறைமுகமான ஒடெசாவுக்கு பயணம் மேற்கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் படுகொலை திட்டத்தில் இருந்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் அதிபரின் வாகன அணிவகுப்பு அருகே ரஷ்ய ஏவுகணை தாக்கிய நிலையில், பலர் கொல்லப்பட்டுள்ளதுடன் காயங்களுடன் தப்பியதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தாக்குதலானது, கிரேக்க பிரதமர் Kyriakos Mitsotakis என்பவருடன் ஜெலென்ஸ்கி பயணப்பட்ட வாகன அணிவகுப்பை இலக்கு வைத்தே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ஏவுகணை தாக்குதல்
ஜெலென்ஸ்கி மற்றும் கிரேக்க பிரதமர் பயணப்பட்ட வாகனத்திற்கு சுமார் 500 முதல் 800 மீற்றர் தொலைவிலேயே ரஷ்ய ஏவுகணை தாக்கியுள்ளது.

இதில் பாதுகாப்பு வீரர்கள் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதல் சம்பவத்தை அடுத்து, பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜெலென்ஸ்கி, நாங்கள் யாரை எதிர்கொள்கிறோம் என்பதை பார்த்தீர்களா? எப்போது எங்கே என்ன நடக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.

நடந்த சம்பவத்தை கிரேக்க பிரதமரும் கண்கூடாக பார்த்துள்ளார். இராணுவ அணிவகுப்பா அல்லது பொதுமக்களா, சர்வதேச விருந்தினர்களா என்பது குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

உயிர்தப்பிய ஜெலென்ஸ்கி
தாமதப்படுத்தாமல் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை முன்னெடுக்க வேண்டும் என்றே தாம் கோரிக்கை வைப்பதாகவும் ஜெலென்ஸ்கி மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஒடெசா துறைமுகத்தின் தேவை மற்றும் முக்கியத்துவம் குறித்து ஜெலென்ஸ்கியும் அவரது அதிகாரிகள் தரப்பும் தமக்கு விளக்கமளித்துள்ளதாக கிரேக்க பிரதமர் Kyriakos Mitsotakis தெரிவித்துள்ளார்.

மேலும், உண்மையில் இந்தப் போர் அனைவரையும் பாதிக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்வும் Kyriakos Mitsotakis குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.