;
Athirady Tamil News

கனேடியர்கள் சிலருக்கு ரஷ்யா விதித்த தடை: வெளியான காரணம்

0

ரஷ்யாவானது கனடாவில் உள்ள 56 குடிமக்களுக்கு அதிரடி தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக மொஸ்கொ வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தடையை ரஷ்யா உடன் நடைமுறைக்கு வரும் வகையில் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரணம்
குறித்த பட்டியலில் உள்ளவர்கள் “OUN-UPA மற்றும் கலீசியா பிரிவைச் சேர்ந்த ஹிட்லரின் ஆதரவாளர்களை புகழ்ந்து பேசும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என ரஷ்யா காரணம் வெளியிட்டுள்ளது.

அத்துடன் (கனடிய) அதிகாரிகளால் தூண்டப்பட்ட ருஸ்ஸோபோபிக் பிரச்சாரத்தில் தீவிரமாக பங்கேற்பவர்கள் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சோவியத் ஆட்சி
OUN-UPA என்பது உக்ரேனிய தேசியவாத சக்தியாகும், இது இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஜேர்மன் படையெடுப்பின் போது சோவியத் ஆட்சிக்கு எதிராகப் போராடிய அமைப்பாக கருதப்படுகிறது.

மேலும், கலீசியா பிரிவு என்பது சோவியத்துக்கு எதிராகப் போராட ஜேர்மன் நாஜி கட்சியின் ”வாஃபென் SS கார்ப்ஸால்” ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட உக்ரேனிய தன்னார்வப் படை என கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.