வெள்ளவத்தையிலுள்ள ஆடையகத்தில் சற்றுமுன் பாரிய தீ விபத்து
கொழும்பு – வெள்ளவத்தையிலுள்ள ஆடையகத்தில் திடீரென தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் பிரபல ஆடை நிறுவனமான (NOLIMIT) நிறுவனத்தின் கிளையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த ஆடையகத்திலிருந்த பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

