;
Athirady Tamil News

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அதிகரிக்கும் அடிப்படை சம்பளம்

0

ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சரவை முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வைப் பெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில், தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட் ஊதியம் 12,500 ரூபாவிலிருந்து 17,500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு
இந்த அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட 3,500 ரூபாவை உள்ளடக்கியது, இதன் விளைவாக புதிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 21,000 ரூபாவாகும். கூடுதலாக, ஊழியர்களின் EDF மற்றும் EPF பலன்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களும் தமது சம்பள உயர்வுக்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதையடுத்து ஜனாதிபதியின் தலையீட்டை விரைவுபடுத்தியுள்ளனர்.

தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் சம்பள அதிகரிப்பு முன்மொழிவுகள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், இந்தக் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கு அமைச்சு தீவிரமாக செயற்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.