பதவி விலகும் சிங்கப்பூர் பிரதமர் – எழுந்துள்ள குற்றச்சாட்டு
சிங்கப்பூர் (Singapore) நாட்டின் பிரதமரான லீ சியென் லூங் (Lee Hsien Loong) பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தற்போது, பிரதமர் லீ சியென் லூங் (Lee Hsien Loong) தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது.
இவரது பதவி விலகல் குறித்து மேலும் தெரியவருகையில்,
ஊழல் குற்றச்சாட்டுகள்
அண்மைக் காலமாக இந்த கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக 02 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
இந்நிலையிலேயே, பிரதமர் லீ சியென் லூங்கும் (Lee Hsien Loong) அடுத்த மாதம் (மே) 15ஆம் திகதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.