;
Athirady Tamil News

இந்தியாவின் சனத்தொகை எவ்வளவு தெரியுமா : ஐ.நா வெளியிட்ட அறிவிப்பு

0

இந்தியாவில் மொத்த மக்கள் தொகை 144.17 கோடியாக இருக்கும் எனவும் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது எனவும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது.

உலக மக்கள் தொகை விவரத்தை ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் வெளியிட்ட நிலையிலேயே மேற்படி தகவல் தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எந்த வயதிற்குள் உட்பட்டவர்கள் அதிகம்
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 24 சதவிகிதம் பேர் 0-14 வயதிற்கு உட்பட்டவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. 10 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்கள் 17 சதவிகிதம் பேர் உள்ளனர். 10 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் 26 சதவிகிதம் பேரும், 15 முதல் 64 வயதிற்கு உட்பட்டவர்கள் 68 சதவிகிதம் பேரும் உள்ளனர். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 7 சதவிகிதம் பேர் 65 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர்.

இந்தியாவில் ஆண்கள் சராசரியாக 71 வயது வரையும், பெண்கள் சராசரியாக 74 வயது வரையும் வாழ்கின்றனர்.

பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பாக கடந்த 30 ஆண்டுகளாக ஏற்பட்ட முன்னேற்றம் உலக அளவில் ஒடுக்கப்பட்ட சமூகங்களை புறக்கணித்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் குழந்தை திருமணம்
2006 முதல் 2023 வரையில் இந்தியாவில் குழந்தை திருமணம் 23 சதவிகிதமாக உள்ளது. பிரசவத்தின்போது ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியாவில் பெருமளவு குறைந்துள்ளது. உலக அளவில் பிரசவத்தின்போது ஏற்படும் உயிரிழப்புகளில் 8 சதவிகிதம் இந்தியாவில் நடைபெறுகிறது.பிரசவத்தின் போது தினமும் சராசரியாக 800 பெண்கள் உயிரிழக்கின்றனர். இந்த சராசரி 2016ம் ஆண்டு முதல் மாறாமல் உள்ளது.

இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் வேலை, செய்யும் இடங்களில் ஜாதி ரீதியில் பாகுபாடு காட்டப்படும் பெண்களுக்கான சட்ட பாதுகாப்பை வழங்க தலித் சமூக ஆர்வலர்கள் போராடுகின்றனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதி ரீதியிலான வன்முறை
தலித் சமூகத்தை சேர்ந்த பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் ஜாதி ரீதியிலான வன்முறைக்குள்ளாகுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சராசரியாக 4ல் ஒரு பெண் தனது பாட்னர் (கணவர், காதலன்.. Patner) பாலியல் உறவுக்கு அழைத்தால் அப்பெண்ணால் முடியாது என்று கூற முடியாத சூழ்நிலை உள்ளது. கருத்தடை செய்வது குறித்து சராசரியாக 10ல் ஒரு பெண்ணால் சொந்தமாக முடிவு எடுக்க முடியவில்லை இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.