;
Athirady Tamil News

நாட்டில் இனங்காணப்பட்டுள்ள மலேரியா நோயாளர்கள்

0

இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில் 9 மலேரியா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூலசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் இன்று (24.04.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது கூறியுள்ளார்.

அமைதி காக்கும் கடமைகள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்தவர்களில் இருந்து அதிக எண்ணிக்கையான மலேரியா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இறுதியாக 2012 ஆம் ஆண்டில் மலேரியா நோய் பதிவாகியிருந்த போதிலும் 2023 ஆம் ஆண்டு 62 மலேரியா நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.

நோயாளர்களில் பெரும்பான்மையானவர்கள் அமைதி காக்கும் கடமைகளுக்குச் சென்ற இராணுவத்தினர் மற்றும் இரத்தினக் கற்கள் வர்த்தகம் செய்யச் சென்றவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.