;
Athirady Tamil News

சர்ச்சையான அமைப்பில் முருகன் சிலை! கோயில் நிர்வாகம் எடுத்த முக்கியமான முடிவு

0

சேலத்தில் உள்ள ராஜ முருகன் கோவிலில் 56 அடி ராஜ முருகன் சிலை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முருகன் சிலை
தமிழக மாவட்டமான சேலம், தாரமங்கலம் அருகே ராஜ முருகன் கோவிலில் 56 அடி ராஜ முருகன் சிலை அமைக்கப்பட்டது.

இந்த சிலையில் உள்ள முருகனின் முக அமைப்பு மற்றும் உடல் வடிவமைப்பு சரியாக இல்லை என்று பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் எழுந்தது.

இதுகுறித்து முருகன் சிலையை வடிவமைத்தவர் கூறுகையில், “இதுவரை எங்கும் முருகன் சிலை வடிவமைத்தது கிடையாது. எனக்கு தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை தான். அதை மட்டுமே வடிவமைத்திருக்கிறேன்.

இதையடுத்து கோயில் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், முருகன் சிலையை புனரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கோவிலின் நிறுவன தலைவர் வெங்கடாஜலம் தெரிவித்துள்ளார்.

இதுவரை முருகன் சிலை வடிவமைக்க 40 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.