;
Athirady Tamil News

பாகிஸ்தான்: பஸ்-வேன் மோதல்; 12 பேர் பலி, 24 பேர் காயம்

0

குவெட்டா

பாகிஸ்தானில் பஸ்சும், வேனும் மோதிக்கொண்டதில் 12 பேர் பலியானார்கள். 24 பேர் காயம் அடைந்தனர்.

பாகிஸ்தானின் தென்மேற்கே, பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பெலா நகரில் இருந்து கராச்சி நோக்கி பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

மோதல்

அப்போது உதல் பகுதியின் குவெட்டா-கராச்சி நெடுஞ்சாலையின் அருகே சென்றபோது, எதிரே கராச்சியிலிருந்து வந்து கொண்டிருந்த பயணிகள் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கராச்சியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். தொடர்ந்து, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4 பேர் பலி

இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். கடந்த 19-ந்தேதி, பலோன் மாவட்டத்தில் தர்பி நகர் அருகே கார் மற்றும் லாரி மோதிய விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். குவெட்டா நகரில் கடந்த 13-ந்தேதி நடந்த விபத்தில் 4 பேரும், ஜூலையில் நடந்த விபத்தில் 40 பேரும் பலியானார்கள்.

இந்த விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.