;
Athirady Tamil News

இளவரசி கேட் தொடர்பில் ஒரு மகிழ்ச்சியான செய்தி: தம்பதியர் வெளியிட்டுள்ள வீடியோ

0

இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டபின், மீண்டும் பணிக்குத் திரும்ப இருக்கிறார் அவர். அதை உறுதி செய்யும் வகையில் இளவரசர் வில்லியம், இளவரசி கேட் தம்பதியர் சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்கள்.

பணிக்குத் திரும்பும் இளவரசி கேட்
ஜனவரி மாதம் அறுவ சிகிச்சை ஒன்றிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளவரசி கேட், பின்னர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தனக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்க, அவரது ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் பிரித்தானிய மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

இளவரசி புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தனது மாமனாரான மன்னர் சார்லசைப்போலவே, சிகிச்சையின் நடுவிலேயே, பணிக்குத் திரும்ப அவரும் முடிவு செய்துள்ளதுபோல் தெரிகிறது.

தம்பதியர் வெளியிட்டுள்ள செய்தி

இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட், சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள ஒரு செய்தி, தன் கணவருடன் இணைந்து கேட் மீண்டும் பணிக்குத் திரும்புவதை உறுதி செய்துள்ளது.

 

அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றிலிருந்து, விவசாயிகள், குறிப்பாக பண்ணை வைத்திருக்கும் இளம் விவசாயிகளின் மன நலம் தொடர்பிலான பணி ஒன்றிற்காக கேட் தனது கணவரான இளவரசர் வில்லியமுடன் கைகோர்த்துள்ளது உறுதியாகியுள்ளது.

ஆக, கேட்டின் உடல் நிலை குறித்து கவலையில் ஆழ்ந்துள்ள அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.