;
Athirady Tamil News

மலம் விற்று வருடத்திற்கு ரூ.1.4 கோடி சம்பாதிக்கலாம்! வியப்பூட்டும் புதிய தொழில் தகவல்!

0

2020 ஆம் ஆண்டில் மைக்கேல் ஹாரோப் என்பவரால் தொடங்கப்பட்ட “ஹ்யூமன் மைக்ரோப்ஸ்” என்ற நிறுவனம், உலகம் முழுவதிலுமிருந்து ஆரோக்கியமான நபர்களிடமிருந்து மலத்தை வாங்கி, அதை குடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்துகிறது.

யார் இந்த மைக்கேல் ஹாரோப்?
கலிபோர்னியாவை சேர்ந்த ஹாரோப், 2014 முதல் நுண்ணுயிர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆரோக்கியமான நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் மலத்தை, குடல் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தும் யோசனையை அவர் உருவாக்கினார்.

மலம் எப்படி சேகரிக்கப்படுகிறது?Human Microbes நிறுவனம் தகுதியான நன்கொடையாளர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறது.

நன்கொடையாளர்கள் சிறந்த உடல் மற்றும் மன ஆரோக்கியம் கொண்டிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்து மலம் மற்றும் இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது.

மல தானம் செய்வதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?
இவ்வாறு மலம் தான் செய்வதன் மூலம் ஒரு மாதத்திற்கு 500 USD (சுமார் ரூ.41,000) வரை சம்பாதிக்க முடியும்.

தினசரி நல்ல குடல் இயக்கம் இருந்தால், வருடத்திற்கு சுமார் 180,000 USD (சுமார் ரூ.1 கோடியே 40 லட்சம்) வரை சம்பாதிக்க முடியும் என “ஹ்யூமன் மைக்ரோப்ஸ்” நிறுவனம் யூடியூபில் விளம்பரத்தில் தெரிவித்துள்ளது.

மல தானம் செய்வதில் ஆர்வம் உள்ளதா?
நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

உங்கள் தகுதி பற்றிய விரிவான மதிப்பீடு அங்கு செய்யப்படும்.

உங்களின் மலம் மாதிரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால், உங்கள் மலத்தை நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும்.

இந்த நிறுவனம் தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து மல தானம் செய்பவர்களை ஏற்றுக் கொள்கிறது.

மனநலம் மற்றும் பிற நோய்களை சரி செய்வதற்கு மல தானம் செய்வது பற்றிய மருத்துவ ஆதாரங்கள் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.