;
Athirady Tamil News

ஜப்பானின் மீம்ஸ் புகழ் கபோசு நாய் உயிரிழப்பு

0

இணைய மீமில் பிரலபமானதும் மற்றும் கிரிப்டோ நாணயத்துக்கு மாற்றீடான பிட்காயின் உருவமான ஜப்பானிய நாயான கபோசு ( kabosu) உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நாய் நேற்று முன் தினம்  (24) தனது 18 ஆவது வயதில் தூங்கும் போது இறந்துள்ளதாக அதன் உரிமையாளர் அட்சுகோ சாடோ தெரிவித்துள்ளார்.

பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ நாணய மோகத்தை பகிடி செய்வதற்காக டோஜ் நாணய (Dogecoin) கிரிப்டோ நாணயம் உருவாக்கப்பட்டது.

கிரிப்டோ நாணயங்கள்
2013 ஆம் ஆண்டில் மென்பொருள் பொறியியலாளர்களான பில்லி மார்கஸ் (Billy Marcus) மற்றும் ஜேக்சன் பால்மரால் (Jackson Palmer) ஆகியோரால் பிட்காயினுக்கு போட்டியாக டோஜ் நாணயம் உருவாக்கப்பட்டது.

பெயரில் துவங்கி செயல்பாடு வரை எல்லாவற்றிலும் டோஜ் நாணய கிரிப்டோ நாணயங்களின் பகிடி நாணயமாக இருந்ததுடன் இதற்காக இணைய மீமில் பிரலபமான ஜப்பானிய நாயின் பெயரையும் மற்றும் உருவத்தையும் தேர்வு செய்தனர்.

இதனடிப்படையில், 2020 ஆம் ஆண்டு கிரிப்டோ நாணயங்களின் ஆதரவாளரான டெஸ்லா கார் நிறுவன தலைவர் எலோன் மஸ்க் (Elon Musk) டோஜ் நாணயம் பற்றி எக்ஸ் பதிவொன்றை இட்டதன் பின்னர் அதன் மதிப்பு அதிகரித்தது.

ஏற்படுத்திய தாக்கம்
அதன் பின்னரும் எலோன் மஸ்க் டோஜ்காயின் கிரிப்டோ நாணயத்தை மீண்டும் மீண்டும் விளம்பரப்படுத்தியதுடன் 2022 ஆம் ஆண்டில் எலோன் மஸ்க் சமூக ஊடக தளமான ட்விட்டர் (Twitter) தளத்தை வாங்கி அதன் சின்னமான நீல பறவையை மாற்றி கபோசுவின் படத்தை பதிவிட்டார்.

இதன் காரணமாக கடந்த ஆண்டு டோஜ் நாணய கிரிப்டோ நாணயத்தின் மதிப்பு நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்ததுடன் எலோன் மஸ்க் ட்விட்டர் தளத்தின் பெயரை எக்ஸ் என மாற்றியுள்ளார்.

Coingecko.com என்ற தரவுத் தளத்தின்படி சுமார் 23.6 பில்லியன் டொலர் சந்தை மூலதனத்துடன் டோஜ் நாணயம் தற்போது ஒன்பதாவது கிரிப்டோ நாணயமாக உள்ளது.

மேலும், இந்த ஒரு நாய் உலகம் முழுவதும் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாததென டோஜ்காயின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.