;
Athirady Tamil News

வவுனியாவில் யானையுடன் மோதி தடம்புரண்ட தொடருந்து

0

வவுனியா, கனகராயன்குளம் காட்டு பகுதியில் யானையுடன் மோதி தொடருந்து தடம்புரண்டுன்டுள்ளது.

நேற்று (25.05) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் யாழில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற தொடருந்து கனகராயன்குளம் காட்டு பகுதியில் தொடருந்து பாதையினை ஊடறுத்து சென்ற யானை மற்றும் யானை குட்டியின் மீது மோதுண்டுள்ளது.

பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்

இதன்காரணமாக, யானை சம்பவ இடத்திலே பலியாகியுள்ளதுடன், யானை குட்டி காயமடைந்த நிலையில் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டு செல்லப்பட்டது.

மேலும் குறித்த விபத்து காரணமாக நான்கு மணி நேரத்தின் பின்னர் சம்பவ இடத்தில் இருந்து பிறிதொரு தொடருந்து சேவை ஊடகவே பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.