சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் – அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் ராஜாங்க அமைச்சர்கள்
ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நாட்கள் நெருங்கி வரும் நிலையில், தென்னிலங்கை அரசியல் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் சமகால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ராஜாங்க அமைச்சர்கள் சிலர் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகிந்த ராஜபக்சவின் விசுவாசிகளான எட்டு ராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு விலகவுள்ளதாக கட்சித் தகவல் தெரிவிக்கின்றன.
நாமலுக்கு ஆதரவு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்தில் இருந்து விலகி, நாமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் எட்டுப் பேரும் தமது ராஜாங்க அமைச்சு பதவிகளை கைவிடவுள்ளனர்.
அதற்கமைய, இராஜாங்க அமைச்சர்களான ஷசீந்த்ர ராஜபக்ஷ , தேனுக விதானகே, இந்திக அனுருத்த , டி வி சானக , பிரன்ன ரனவீர, சிரிபால கம்லத், மொஹான் டி சில்வா, ஆகிய 8 இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.