புதிய கட்சியொன்றைத் தொடங்கிய எலான் மஸ்க்

எலோன் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சியொன்றைத் தொடங்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த கட்சிக்கு ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என பெயரிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எலோன் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் அண்மையில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தினார்.
அதில் அமெரிக்காவில் 80 சதவீத நடுத்தர மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு புதிய கட்சி தேவையா? என கேள்வியொன்றை எழுப்பியிருந்தார்.
இதற்கு 80 சதவீத மக்கள் ‘ஆம்’ என பதிலளித்துள்ளனர்.
இந்தநிலையில் எலோன் மஸ்க் ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்ற பெயரில் கட்சியொன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.