;
Athirady Tamil News

கோவிட்டை விட மோசமான ஒன்று… பூஞ்சை கடத்தல் விவகாரத்தில் எச்சரிக்கும் சீன நிபுணர்

0

அமெரிக்கா கவனமாக இல்லாவிட்டால், கோவிட்டை விட மோசமான ஒன்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக சீனா குறித்த அமெரிக்காவை சேர்ந்த ஒரு உயர் நிபுணர் எச்சரித்துள்ளார்.

வேளாண் பயங்கரவாத ஆயுதம்
அமெரிக்காவிற்குள் நச்சு பூஞ்சையை கடத்தியதாக இரண்டு சீன விஞ்ஞானிகள் மீது குற்றம் சாட்டப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யுன்கிங் ஜியான் (33) மற்றும் அவரது காதலன் ஜுன்யோங் லியு (34) ஆகியோர் ‘ஃபுசாரியம் கிராமினேரம்’ என்ற பூஞ்சையை அமெரிக்காவிற்குள் கடத்த சதி செய்ததாகக் கூறப்படுகிறது.

இது கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் அரிசியில் “தலை கருகல் நோயை” ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், அறிவியல் இலக்கியங்களில் தொடர்புடைய பூஞ்சை “சாத்தியமான வேளாண் பயங்கரவாத ஆயுதம்” என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பையும் ஏற்படுத்துகிறது. இது மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்க குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.

போர் தொடுப்பதற்குச் சமம்
கைதான இந்த இணை முன்பு சீனாவில் பூஞ்சை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்ததும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கைப் பற்றி சீன விவகாரங்கள் குறித்த அமெரிக்காவின் உயர்மட்ட நிபுணர் கோர்டன் ஜி சாங் குறிப்பிடுகையில்,

இந்த ஜோடியின் செயல் அமெரிக்காவிற்கு எதிராகப் போர் தொடுப்பதற்குச் சமம் என்றார். மேலும், சீனாவுடனான உறவுகளைத் துண்டிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கவில்லை என்றால், அது கோவிட்டை விட ஒருவேளை மோசமான ஒன்றால் பாதிக்கப்படக்கூடும் என்று சாங் எச்சரித்துள்ளார்.

அத்துடன், கடந்த 2020 ல், அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் உள்ள மக்கள் பலர் சீனாவிலிருந்து கோரப்படாத விதைகளைப் பெற்றதாக அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

இதைத் தடுப்பதற்கான ஒரே வழி சீனாவுடனான உறவைத் துண்டிப்பதுதான். மக்கள் அதை மிகவும் கடுமையானது என்று நினைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நாம் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.