சைகைமொழிப் பயிற்சி மற்றும் உளவியல் பாடநெறியை நிறைவு செய்த யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
சைகைமொழிப் பயிற்சி மற்றும் உளவியல் பாடநெறியை நிறைவு செய்த யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது சைகைமொழிப் பயிற்சியை நிறைவு செய்த பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் விழிப்புணர்வு நாடகம் மற்றும் நிகழ்வுகளும் இடம்பெற்றது.
நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன், வளவாளர் கலாநிதி நா.விஜிதா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.