;
Athirady Tamil News

அரசு வேலைக்காக.. கிறிஸ்தவ மதத்தில் உள்ளவர்கள் இந்து எஸ்சி சான்றிதழ் பெறலாமா? உச்ச நீதிமன்றம் காட்டம்!

0

கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த முடியாது.

சாதிச் சான்​றிதழ்
புதுச்​சேரியைச் சேர்ந்தவர் சி.செல்​வ​ராணி. இவரது தந்தை இந்து ஆதிதிரா​விடர் வகுப்​பைச் சேர்ந்​தவர். தாயார் கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர். செல்​வ​ராணி தேவால​யத்​தில் ஞானஸ்​தானம் பெற்​றவர்.

ஆனால், மாநில அரசின் கிளார்க் பணியிடத்​துக்காக பட்டியலின வகுப்​பைச் சேர்ந்​தவர் எனக்​கூறி விண்​ணப்​பித்து தேர்ச்சி பெற்றுள்ளார். பின் சாதிச் சான்​றிதழ் சரிபார்ப்​பின்​போது அவர் கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர் என்பது கண்டறியப்​பட்டுள்ளது.

தொடர்ந்து, தனது தந்தை​யின் இந்து மதத்​தின் அடிப்​படை​யில் பட்டியலின வகுப்​பைச் சேர்ந்​தவர் என சாதி சான்​றிதழ் வழங்​கும்படி கோரியுள்ளார். இதனை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இதனை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

அதில், இடஒதுக்​கீட்டு சலுகைகளைப் பெறு​வதற்காக மதம் மாறு​பவர்​களுக்கு இதுபோல சாதிச் சான்​றிதழ் வழங்க முடி​யாது எனக்​கூறி வழக்கை நீதி​மன்றம் தள்ளுபடி செய்​தது. இதனையடுத்து உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிப​திகள் பங்கஜ் மித்​தல், ஆர்.ம​காதேவன் அடங்கிய அமர்வு,

மனுதாரர் கிறிஸ்துவ மதத்தை தீவிரமாக கடைபிடிக்​கும்​போது, அரசு வேலை​வாய்ப்​புக்காக இந்துவாக தன்னை அடையாளப்​படுத்த முற்​படுவதை ஏற்க முடி​யாது. மேலும் அது அரசி​யலமைப்பு சட்டத்​தையே மோசடி செய்​வதற்கு சமம் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.