அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக வைத்தியர் சத்தியமூர்த்தி முறைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு(Ramanathan Archchuna) எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த முறைப்பாடானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தியினால் அளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாக வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
முறைபாடு குறித்து விசாரணை
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக யாழ். காவல்துறை தெரிவித்துள்ளது.