2025 கேட் மிடில்டனுக்கு எப்படி இருக்கும்? இளவரசி டயானாவின் ஜோதிடர் கணிப்பு

பிரித்தானிய இளவரசி டயானாவின் தனிப்பட்ட ஜோதிடர் ஒருவர் இந்த 2025-ஆம் ஆண்டு இளவரசி கேட் மிடில்டனுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்த தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இளவரசி டயானாவின் ஜோதிடர் டெபி பிராங்க் (Debbie Frank), 2025-ஆம் ஆண்டில் கேட் மிடில்டன் மிக முக்கிய பங்கு வகிப்பார் என கணித்துள்ளார்.
கேட் இந்த ஆண்டு தொடக்கத்தில் மெதுவாக ஆரம்பித்தாலும், மார்ச் 29 அன்று சூரிய கிரகணம் நடைபெறுவதுடன், அவரது உடல்நல சிக்கல்கள் முடிவுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார சிக்கல்களை முடிவுக்குக் கொண்டு வரும் நேரம்
2024-ஆம் ஆண்டில் கேட் தனது புற்றுநோயை வெற்றிகரமாக எதிர்கொண்ட பின், 2025-ஆம் ஆண்டில் பல நேரங்களில் அவர் புதிய உற்சாகத்துடன் செயல்படுவார் என்றும், மார்ச் மாதத்தில் கேட் மற்றும் வில்லியமின் உடல்நல துன்பங்கள் முடிவுக்கு வரும் என டெபி கணிக்கிறார்.
பிரகாசமான காலம்
2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கேட்டின் ராசியில் செவ்வாய் கிரகத்தின் பாதை காரணமாக அவர் அதிக கவனத்தை ஈர்ப்பார்.
செப்டம்பர் மாதம் கேட்டுக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும், மேலும் அக்டோபர் மாதத்தில் அவர் ஒரு முக்கிய வெற்றியைப் பெறுவார் என கூறப்படுகிறது.
டயானாவின் நினைவுகள்
டெபி பிராங்க், 1997-ஆம் ஆண்டு டயானா இறந்தபோது தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தினார்.
துரதிர்ஷ்டவசமா, டயானாவின் மகன்களான வில்லியமிற்கும் ஹரிக்கும் இடையே குடும்பப் பிரச்சினைகள் இருந்தாலும், அவர்கள் வளர்ந்து வந்ததை பார்ப்பது அவருக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.
ஏனெனில் அவர்களில் அவர் டயானாவின் குணாதிசயங்களைக் காண்பதாகவும், டயானா அவர்களின் வளர்ச்சியைப் பாராட்டுவார் என டெபி உறுதியாக கூறுகிறார்.