;
Athirady Tamil News

ட்ரம்ப் மகள் இவான்கா மீது கண் வைக்கும் எலான் மஸ்க்: இணையவாசிகள் குற்றச்சாட்டு

0

ட்ரம்ப் அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற உதவியதிலிருந்து, அவர் இருக்கும் இடமெல்லாம் எலான் மஸ்கும் இருக்கிறார்.

இந்நிலையில், ட்ரம்பின் மகளான இவான்கா மீது எலான் மஸ்க் கண் வைப்பதாக இணையவாசிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்கள்.

கிட்டத்தட்ட ட்ரம்பின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் போலவே ஆகிவிட்டார் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க்.

இந்நிலையில், ட்ரம்ப் பதவியேற்கும் முன் அளித்த விருந்தொன்றில், எலான் மஸ்க் இவான்காவிடன் பேசி சிரித்துக்கொண்டிருக்கும் காட்சிகள் பரவலாக பல ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், இவான்கா தன் தந்தை பதவியேற்றதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்களை தனது சமூக ஊடகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.


எலான் மஸ்க் அந்த புகைப்படத்தின் கீழ் ’Making fashion beautiful again’ என்று கமெண்ட் செய்திருந்தார்.

அதாவது, ’Make America Great Again’ என்பது ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு வாசகம் ஆகும்.

அதைப் பின்பற்றிதான் எலான் மஸ்க் இவான்காவின் படத்தில் கமெண்ட் செய்திருந்தார்.

ஆனால், ஏற்கனவே தேவையில்லாமல் பலரது விடயத்தில் எலான் மஸ்க் தலையிடுவதால் எரிச்சலில் இருக்கும் மக்கள், எலானது செயலை மோசமாக விமர்சித்துள்ளனர்.

இவான்காவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது தம்பி என்று ஒருவர் விமர்சிக்க, மற்றொருவரோ, எலான் மெல்ல இவான்கா மீது கண் வைக்கிறார் என்று எழுத இன்னொருவர், மோசமான ஆள், தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார் என்னும் ரீதியில் விமர்சித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.