;
Athirady Tamil News

மருதானையில் உயிரிழந்த பெண் தொடர்பில் விசாரணை தேவை

0

மருதானை காவல் நிலையத்தில் தற்கொலைசெய்துகொண்டதாக சொல்லப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவரப்படவேண்டும் என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கிளிநொச்சியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவர் காவல்துறையால் கைது செய்யப்படு மருதானை காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது நேற்று புதன்கிழமை இறந்துள்ளார்.

மருதானை காவல்துறையினர் இம்மரணத்தைத் தற்கொலை என்று தெரிவித்துள்ளதோடு , கஞ்சா வைத்திருந்ததாலேயே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

செய்தியறிந்து சடலத்தை பார்வையிட்ட தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் இம்மரணம் தொடர்பாகச் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர்.

காலங் காலமாக ஸ்ரீலங்காவில் காவல்துறையினர் பொய்க் க்குற்றச்சாட்டுகளைச் சோடித்து வந்துள்ளநிலையில் , இக்காவல்நிலைய மரணம் தொடர்பான உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவதற்கு எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.