;
Athirady Tamil News

சாட்டி இந்து மயானம் தொடர்பாக பொதுமக்கள் அதிருப்தி

0

வேலணை சாட்டி இந்து மயானமானது வேலணைப் பிரதேச சபை மற்றும் அச்சபையினரால் அமைக்கப்பட்ட மயான பரிபாலன சபையினரால் நிர்வகிக்கப்படுகின்றது. ஓர் உடலை தகனம் செய்வதற்கு பிரதேச சபையில் ரூபாய் 5000 பணம் செலுத்தி பற்றுச்சீட்டு பெற்றுக் கொண்ட பின்னரே தகனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர் .இதில் ரூபா 2500 தகனத்தை எரிக்கும் நபருக்கு வழங்குவதற்கென கூலியாக பெற்றுக்கொள்கின்றனர் ஆனால் சடலத்தை கொண்டு சென்ற பின்னர் அங்கு எரிக்கும் நபர் எவரும் இல்லாது மக்கள் ஏமாற்றப் படுகின்றனர். இதனைத் தொடர்ந்து மக்களால் சடலங்களை எரிக்கும் நபர்களை ஒழுங்கு பண்ணி இறுதிக் காரியங்களை நிறைவேற்றுவதற்கு 10000 -15000 ரூபா வரை வழங்க வேண்டியுள்ளது .

பல வருடங்களாக இடம்பெறும் இப் பொறுப்பற்ற ஏமாற்று நடவடிக்கை தொடர்பாக பிரதேச சபை மற்றும் மயான பரிபாலன சபையிடம் வினவியபோது ஒருவரை ஒருவர் மாறி குற்றம் சாட்டுகின்றனர் பொறுப்பான பதில் எதையும் அளிக்கவில்லை. இப் பணம் பறிக்கும் செயற்பாட்டிற்கு பிரதேசபை நிர்வாகமே பொறுப்பாகும். ஏனெனில் சாட்டி மயானமானது அவர்களின் உரிமைக்கு உட்பட விடயமாகும்.

இப் பொறுப்பற்ற ஏமாற்று நடவடிக்கை தொடர்பாக வடமாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளரிடம் முறையிடுவதற்கு தீவகம் சிவில் சமூகம் நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.