பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்ட விடே அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக விமான பயணங்கள் குறித்து விசாரிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பல தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவைகள் தொடர்பான கூடுதல் தகவல்களை பெற இலங்கைக்குள் 1979 என்ற சிறப்பு இலக்கத்தின் ஊடாகவும் +94 11 777 1979 என்ற தொலைபேசி எண்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அழைப்புகளுக்கு, வட்ஸ்அப் வழியாக மட்டுமே தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக +94 74 444 1979 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிறுவனம்
விமான டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்ட பயண முகவர் அல்லது www.srilankan.com என்ற வலைத்தளத்தைப் பார்வையிடுமாறு விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கின் நிலைமையை கருத்தில் கொண்டு, நேற்று மத்திய கிழக்கிற்கான அனைத்து விமானங்களையும் இரத்து செய்ய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பிராந்தியத்தில் போர் நிலைமை மற்றும் விமான எல்லைகள் மூடப்படுவதை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
அதற்கமைய,
UL 225 கொழும்பு – டுபாய்,
UL 226 டுபாய் – கொழும்பு,
UL 231 கொழும்பு -டுபாய்,
UL 232 டுபாய் – கொழும்பு,
UL 229 கொழும்பு – குவைத்,
UL 230 குவைத் – கொழும்பு,
UL 217 கொழும்பு – தோஹா,
UL 218 தோஹா – கொழும்பு,
UL 253 கொழும்பு – தம்மாம்,
UL 254 தம்மாம் – கொழும்பு,
UL 265 கொழும்பு – ரியாத்,
UL 266 ரியாத் – கொழும்பு ஆகிய விமான எண்களைக் கொண்ட விமானங்கள் நேற்று இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.