;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் வெளியில் செல்வோருக்கு முக்கிய அறிவித்தல்

0

இலங்கையின் வளிமண்டலச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வறண்ட வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சபரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும்.

வடபகுதியைப் பொறுத்தவரை யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சில இடங்களிலும் இவ்வாறான காலநிலை நிலவக்கூடும்.

மழைக்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுவதால், வறண்ட வானிலையுடன் கூடிய வெப்பமான நிலை பகல் வேளையில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.