;
Athirady Tamil News

இன்னொரு காசாவாக மாறுகின்றதா ஈரான்; சிறுவர்கள் உட்பட 787 பேர் பலி

0

அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை ஈரான் செஞ்சிலுவை சங்கம் புதுப்பித்துள்ளது.

தாக்குதல்களால் 787 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 176 பேர் சிறுவர்கள் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஈரான் முழுவதும் 153 நகரங்கள் பாதிப்பு
சமீபத்திய தாக்குதல்களால் ஈரான் முழுவதும் குறைந்தது 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இலக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை 504 என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை பதிவான தாக்குதல்களின் எண்ணிக்கை 1,039 ஆக அதிகரித்துள்ளது

மீட்புப் பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், இடிபாடுகளை அகற்றுதல், காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு மாற்றுதல் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தாக்குதலிகளால் மக்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழக்கும் துயரம் உலகை உலுக்கிவரும் நிலையில் ஈரானின் இன்றைய நிலமையானது மற்றுமொரு காசாவாக இரான் மாறுகின்றதா என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.