;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் உட்பட 6 பிரதேசங்கள் தொடர்பில் எச்சரிக்கை!

0

இலங்கையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 நகரங்கள் மற்றும் பகுதிகளில் காற்றின் தர நிலை சற்று மோசமான நிலைகளை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, காலி, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

உடல்நல பிரச்சினைகள்
காற்றின் தரக் குறியீடு (SL AQI) 0 முதல் 50 வரை இருந்தால் நல்லது என்றும், 51 முதல் 100 வரை இருந்தால் மிதமானது என்றும் கருதப்படுகிறது.

அதேவேளை காற்றின் தரம் குறைவதால், உடல்நல பிரச்சினைகள் உள்ள நபர்கள், குறிப்பாக காற்று மாசுபாட்டினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.