;
Athirady Tamil News

சட்டவிரோதமாக குடியேறிய 200 பேரை நாடு கடத்தியதும் அமெரிக்கா

0

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள, புலம்பெயர் அகதிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையில் முதலாவதாக கொலம்பியாவை சேர்ந்த 200 பேர் நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளார்.

அந்தவகையில் முதலாவதாக கொலம்பியாவைச் சேர்ந்த பலரை இராணுவ விமானங்கள் மூலம் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் செயற்பாட்டை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த கொலம்பிய அரசாங்கம், 25 சதவீத வரி அறவிடப்படும் என ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து சம்மதம் தெரிவித்திருந்தது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு நிறைவடைந்து இரு நாடுகள் இடையே மீண்டும் விமான சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இருந்து கொலம்பிய மக்களை அழைத்து வருவதற்காக இரண்டு இராணுவ விமானங்களை கொலம்பிய அரசாங்கம் அனுப்பி வைத்திருந்தது.

இந்நிலையில் 200-க்கும் மேற்பட்ட கொலம்பியாவை சேர்ந்த புலம் பெயர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு தலைநகர் போகோட்டாவை விமானங்கள் வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த நடவடிக்கைக்கு சிலர் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.