40 புதிய Icebreaker கப்பல்களை வாங்கும் அமெரிக்கா: டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா புதிதாக 40 Icebreaker கப்பல்களை வாங்குவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்திலேயே 40 பெரிய ஐஸ்பிரேக்கர் கப்பல்களை (Icebreakers) வாங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இது பலரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில், அமெரிக்காவின் பழைய ஐஸ்பிரேக்கர்கள் மிகுந்த சிரமத்துடன் ஒரு கனடிய கப்பலை பனிக்கட்டிகளிலிருந்து விடுவித்த சம்பவம், இந்தத் தேவை அவசியமானது என்பதை உறுதிப்படுத்துகிறது.
பழைய கப்பல்கள்
Great Lakes பகுதியில் பனிக்கட்டிகளை உடைத்து வழிவிடும் அமெரிக்க கப்பல்கள் மிகவும் பழையவை.
சில கப்பல்கள் 1970-80களில் கட்டப்பட்டவை என்பதால், அவை தொடர்ந்தும் செயல்பட அதிக செலவை கொண்டுள்ளன.
அதே நேரத்தில், கனடாவின் சாமுவேல் ரிஸ்லி (Samuel Risley) போன்ற கப்பல்கள் இன்னும் வலுவான செயல்திறனைக் கொண்டுள்ளன.
புதிய திட்டத்தால் எதிர்பார்க்கப்படும் பயன்கள்
– அர்க்டிக் மற்றும் அன்டார்க்டிகாவில்(Arctic & Antarctic) அமெரிக்காவின் செயல்பாடுகளை அதிகரிக்க உதவும்.
– கிரேட் லேக்ஸ் பகுதியில் கடல் போக்குவரத்து தடையில்லாமல் தொடர உதவும்.
– அரசியல் மற்றும் வர்த்தக ரீதியில் கனடாவுடன் ஒத்துழைப்பை வளர்க்கலாம்