;
Athirady Tamil News

சிறைக்குச் சென்ற பிரித்தானிய இளவரசி கேட்: விசிலடித்த பெண் கைதிகள்

0

பிரித்தானிய இளவரசி கேட், இங்கிலாந்திலுள்ள சிறை ஒன்றிலிருந்த சில கைதிகளை சந்திக்கச் சென்ற நிலையில், அங்கிருந்த பெண்கள் அவரைப் பார்த்து விசிலடித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

இளவர்சி கேட், இங்கிலாந்தின் Cheshire என்னுமிடத்தில் அமைந்துள்ள சிறைச்சாலை ஒன்றைக் காணச் சென்றார்.

சிறையில் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண் கைதிகள் சிலரை சந்தித்து அவர்களுடைய மன நிலையை அறிந்துகொள்வதற்காக அங்கு சென்றிருந்தார் அவர்.

அப்போது, ஒருபக்கம் இளவரசியைக் கண்ட சிலர் உற்சாகக் குரல் எழுப்ப, சிலரோ இளவரசியைப் பார்த்து விசில் ஒலி எழுப்பினார்கள்.

இளவரசியோ அனைவரயும் பார்த்து புன்னகையுடன் கையசைத்தபடி, அருகிலிருந்தவர்களுக்கு ஹலோ சொல்லியபடியே நடந்து சென்றுள்ளார்.

சமீபத்தில் சிறையில் குழந்தை பெற்றெடுத்த சிலரையும், முன்பு சிறையில் குழந்தை பெற்றெடுத்த அனுபவமுடைய சிலரையும் சந்தித்து உரையாடினார் அவர்.

சிறையில், கர்ப்பிணிகளுக்கும், குழந்தை பெற்றவர்களுக்கும் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கு குழந்தைகளை கவனித்துக்கொள்ள அந்தப் பெண்களுக்கு உதவுவதற்காக பயிற்சி பெற்ற சிறை அலுவலர்கள் இருப்பார்களாம்.

இளவரசியிடம் பேசிய ஒரு முன்னாள் கைதி, அவசரப்பட்டு முன்பின் யோசிக்காமல் தவறு செய்து சிறைக்குச் சென்றுவிட்டோம். கடந்த காலத்தை மாற்றமுடியாது.

ஆனால், குழந்தை பிறந்ததும் இங்கு இப்படி ஒரு வசதி இருந்ததால் குழந்தையுடனான பிணைப்பின்மீது கவனம் செலுத்த முடிந்தது என்று கூறியுள்ளார்.

சிறை அலுவலர்கள் இந்த குழந்தை பெற்ற பெண்கள் நலனில் காட்டும் அக்கறைக்காக அவர்களை பாராட்டிய இளவரசி, குழந்தைக்கு தேவையான முக்கிய விடயமே, தன்னை உணர்வு ரீதியாகவும் அக்கறையுடனும் கவனித்துக்கொள்ளும் தாய்தான்.

நீங்களோ, அந்த தாய்களையும் நன்றாக கவனித்துக்கொள்கிறீர்கள் என அந்த அலுவலர்களைப் பாராட்டினார் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.