;
Athirady Tamil News

ஊடகத் துறையின் விருட்சம் விடைபெற்றுவிட்டது – பாரதியின் இறுதி அஞ்சலி உரையில் ஈ.பி.டிபி செயளாளர் நாயகம் டக்ளஸ்!

0

ஒருவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதன் அர்த்தத்தை அவரது இறுதி நிகழ்வில் தெரியும். அதற்கு எடுத்துக்காட்டாக மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இழப்பு சுட்டி நிற்கின்றது என்று மறைந்த மூத்த ஊடகவியகாளர் பாரதிக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது அஞ்சலி உரையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகத்துறையின் மூத்து ஊடவியலாளர் பாரதியின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அன்னாரது புகழுடலுக்கு தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியதுடன் ஆறா துயருற்றுருந்த குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் கூறியுள்ளார்.

குறித்த அஞ்சலி கூட்டத்தில் அஞ்சலி உரை நிகழ்த்தியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளாத்துள்ளார்.

உடல் நலத்தால் பாதிக்கப்பட்டிருந்த அமரர் இராஜநாகம் பாரதி கடந்த 9 ஆம் திகதி தனது 62 ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில் இன்றையதினம் (13) அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச ஊடக துறைசார் தோழர்கள், அரசியல் தலைவர்கள், சமூக செயற்பட்டாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து தமது அஞ்சலிகளை செலுத்தியிருந்ததுடன் அஞ்சலி உரைகளும் நிகழ்த்தி பாரதியின் அழிக்கப்பட முடியாத வரலாற்று தடங்களை எடுத்துக் கூறி நினைவு கூரி தமது உணர்வுகளை வெளிப்படுத்தி அமரர் பாரதிக்கு இறுதி விடை கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.