யாழில் ஆலயம் ஒன்றின் உண்டியல் திருட்டு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று பிலிப்புநேரியார் ஆலயத்தில் காணிக்கை உண்டியல் களவாடப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு (01.03.2025) இடம்பெற்றுள்ளது.
ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக நேற்றைய தினம் (02) சென்றிருந்த மக்கள் குறித்த காணிக்கை உண்டியல் ஆலயத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பங்குத்தந்தை மற்றும் ஆலய அருட்பணிச் சபையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சமீப காலமாக இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.