அரசாங்கத்திற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் – சஜித் பிரேமதாச

விவசாயிகளையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றிய தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிர்வரும் தேர்தலில் மக்கள் கடுமையான பாடம் புகட்ட வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
“விவசாயிகளையும், அரசு ஊழியர்களையும் முன்னிறுத்தி ஆட்சியைப் பிடித்த தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு, இன்று அவர்களை முற்றிலும் மறந்து விட்டது,” என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
விவசாயிகளுக்கு உரச்சலுகை வழங்கப்படவில்லை, நெல் உற்பத்திக்கான போதிய உத்தரவாத விலையே கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொய் வாக்குறுதிகள்
அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பள உயர்வும் கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹொரவ்பத்தான பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு தரமான விவசாய உபகரணங்கள் கிடைக்கவில்லை. கிடைக்கும் சில உரங்களின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விவசாயிகளின் பயிர்சேதத்திற்கான இழப்பீட்டுகூட அரசு வழங்கவில்லை என்பதால், அவர்கள் பெரும் சவால்களை எதிர்கொள்கிறார்கள் என சஜித் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.