;
Athirady Tamil News

நயாகராவில் தட்டம்மை நோய் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

0

சென் கெதரீன்ஸ் St. Catharines நகரில் மூன்று பேருக:கு தட்டம்மை நோய்த்தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நயாகரா பகுதி சுகாதார அதிகாரிகள், தெரிவித்துள்ளனர்.

பாதிதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சிறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2ம் திகதி மாலை 4:20 முதல் 6:20 வரை MedCare Clinics (Scott Street Medical Centre, 387 Scott Street, Grantham Avenue அருகில்) சென்றவர்களுக்கு தட்டம்மை நோய்த் தொற்று பரவியிருக்க வாய்ப்பு உள்ளது என நயாகரா பொதுச் சுகாதாரத்துறை (NRPH) அறிவித்துள்ளது.

தட்டம்மை தடுப்பூசி போட்டிருந்தாலும், எதிர்வரும் 24ம் திகதி வரை நோயாளிகள் அறிகுறிகளை கவனிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளாகியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படும் நபர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தட்டம்மை நோய் சிறு குழந்தைகள், வயதானோர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்,” என நயாகரா பகுதி சுகாதார அதிகாரி டாக்டர் அசீம் காஸ்மானி தெரிவித்தார்.

“தங்களையும், குடும்பத்தினரையும், சமூகத்தையும் பாதுகாக்க மக்கள் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.