;
Athirady Tamil News

ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! மூவர் மரணம்..ஆபத்தான நிலையில் பலர்

0

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர்.

சொந்த ஊர் மீது தாக்குதல்
உக்ரைனின் Kryvyi Rihயில் இரவில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இது ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சொந்த ஊராகும்.

ஒரு ஹொட்டல் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும் 31 பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் பாதி பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல் குறித்து Dnipropertrovsk பிராந்திய ஆளுநர் செர்ஜி லைஸாக் கூறுகையில், “இரவு ஏவுகணைத் தாக்குதலால் Kryvyi Rihயில் மூன்று பேர் உயிரிழந்தனர். அந்த உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என்றார்.


பாதுகாப்பு காவலர் மரணம்

இதற்கிடையில், ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் ஒரு ஹொட்டல் உட்பட 14 அடுக்குமாடி குடியிருப்புகள், ஒரு தபால் அலுவலகம், கிட்டத்தட்ட இரண்டு டஜன் கார்கள், ஒரு கலாச்சார நிறுவனம் மற்றும் 12 கடைகளை சேதப்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் வடக்கே உள்ள Sumyயில் உள்ள ஒரு கிடங்கு தாக்கப்பட்டபோது ஒரு பாதுகாப்பு காவலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.