சத்தீஸ்கரில் கள்ளச்சாராயம் அருந்திய 2 பேர் பலி

சத்தீஸ்கரில் கள்ளச்சாராயம் அருந்திய இரண்டு பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்ச்கீர் சம்பா மாவட்டத்தில் உள்ள பத்லி கிராமத்தில் வியாழக்கிழமை கள்ளச்சாராயம் அருந்திய இரண்டு பேருக்கு வாயில் இருந்து நுரை வரத் தொடங்கியது.
இருவரும் ஆரம்பத்தில் நவாகர் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இருப்பினும், அவர்களின் நிலை மோசமடைந்ததால், உடனடியாக ஜஞ்ச்கீர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, ராம் கோபால் என்ற நபர் சீதா ராம் மற்றும் ரோஹித் இருவருக்கும் மதுபானத்தை வழங்கி உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலியானோரின் குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
உடற்கூராய்வு மற்றும் தடயவியல் அறிக்கைகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பங்கச் சந்திரா கூறியுள்ளார்.