துர்நாற்றத்துடன் கிடந்த கைப்பெட்டி..திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் கைப்பெட்டிக்குள் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிராவின் ராவின் மாவட்டத்தில் உள்ள துர்ஷெட் கிராமத்தில், சந்தேகத்திற்கிடமாக கைப்பெட்டி ஒன்று சாலையோரம் கிடந்துள்ளது.
அதிலிருந்து துர்நாற்றம் வீச, அதனை கவனித்த சிலர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த பொலிஸார் கைப்பெட்டியை திறந்து பார்த்தனர்.
அதில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த பெண்ணின் வயது 25 முதல் 35 இருக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், பொலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையோரம் கைப்பற்றப்பட்ட கைப்பட்டியில் பெண்ணின் சடலம் இருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.