“பெண்கள் உரிமைகளுக்கான விடயப் பரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட மாற்றம்” என்ற தொனிப் பொருளிலான கருத்துப்பகிர்வு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தினர் யாழ். பல்கலைக்கழக சட்டத் துறையுடன் இணைந்து உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த “பெண்கள் உரிமைகளுக்கான விடயப் பரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட மாற்றம்” என்ற தொனிப் பொருளிலான கருத்துப்பகிர்வு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தலைமையில் நடந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை பீட தலைவி சட்டத்தரணி திருமதி கோசலை மதன், சட்டத்தரணி புராதனி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்றியிருந்தனர்.
நிகழ்வில் பால் நிலை சமத்துவம், பெண்களின் அரசியல் பிரதித்துவம், சமூகத்தில் சமவாய்ப்பு, பெண்களுக்கான விஷேட சட்டவாக்கம், குடும்ப வன்முறைச் சட்டம், தேசவழமைச் சட்டம்,உள்ளூர் அதிகார சபைகளில் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய வகிபாகம் தொடர்பான சட்டம், பெண்களுக்கான விஷேட சட்டம் தொடர்பான அடிப்படை அறிவு,தொழில் உரிமை, மகப்பேற்று காலச்சட்டம், அரசியல் அமைப்பு, தனிப்பட்ட பாதுகாப்பு, சமூக ஊடகங்கங்களின் தாக்கம் உள்ளிட்ட பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக தெளிவூட்டப்பட்டது.
இந்நிகழ்வில் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பா ட்டாளர்கள், மகளிர் அமைப்பின் பிரதி நிதிகள் பொஸிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
o