;
Athirady Tamil News

மூன்று வயது சிறுவனின் மரணம்; தீர்ப்பு வெளியானது

0

கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஹம்தி ஃபஸ்லிம் என்ற மூன்று வயது சிறுவனின் மரணம் தொடர்பான தீர்ர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் மரணம் தொடர்பில் நீதவான் விசாரணையின் தீர்ப்பை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (11) அறிவித்துள்ளது.

அதிர்ச்சியால் சிறுவன் மரணம்
தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குணவல, பாதிக்கப்பட்ட சிறுநீரகங்களில் ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியதைத் தொடர்ந்து சிறுநீர் வடிகட்டுதல் செயல்முறை முழுமையாக தோல்வியடைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியால் சிறுவனின் மரணம் ஏற்பட்டதாகக் கூறினார்.

அதன்படி, குறித்த சிறுவனின் மரணம் வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியத்தால் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் வெளிப்பட்டால், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேலதிக நீதவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பிறகு வைத்திய ஊழியர்களின் அலட்சியத்தால் தங்கள் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி, சிறுவனின் பெற்றோர் பொரளை பொலிஸில் முறைப்பாடு அளித்ததை தொடர்ந்து இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.