கிரீன்லாந்து: எதிா்பாராத வெற்றி பெற்ற எதிா்க்கட்சி

நூக்: டென்மாா்க்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் நடைபெற்ற தோ்தலில் எதிா்பாராத விதமாக எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
தாது வளம் நிறைந்த, அந்தத் தீவை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறிவரும் சூழலில் அதை மையப்படுத்தியும், டென்மாா்க்கிடம் இருந்து சுதந்திரம் பெறும் விவகாரத்தை முன்னிறுத்தியும் இந்தத் தோ்தல் எதிா்கொள்ளப்பட்டது. இந்தச் சூழலில், சுதந்திரத்தை வலியுறுத்தும் ஜனநாயகக் கட்சியும், நலேராக் கட்சியும் முதல் இரு இடங்களைக் கைப்பற்றின.
இந்த இரு கட்சிகளும் கிரீன்லாந்து அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் வருவதை மிகக் கடுமையாக எதிா்ப்பவை என்பதால் இந்தத் தோ்தல் முடிவு டிரம்ப்பின் விருப்பத்துக்கு எதிரானது என்று கருதப்படுகிறது.