;
Athirady Tamil News

என்னை இங்குதான் புதைத்தார்கள்; சிறுவன் காட்டிய இடத்தில் தோண்டியவர்களுக்கு அதிர்ச்சி!

0

சிரியாவின் கோலன் ஹெய்ட்ஸ் பகுதியில் நிகழ்ந்திருக்கும் சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முன்ஜென்மத்தில் நடந்ததை நினைவில் கொண்டிருக்கும் சிறுவனைப்பற்றியதுதான் அது.

பிறக்கும்போதே நெற்றியில் பெரிய சிவப்பு நிற தழும்புடன் பிறந்த குழந்தையைப் பார்த்ததுமே, அவர்கள் வீட்டில் இருந்த பெரியவர்கள், இது நிச்சயம் முன் ஜென்மத்தில் அந்தக் குழந்தைக்கு நேரிட்ட ஏதோ ஒரு சம்பவத்தின் தொடர்புதான் என்று கட்டாயம் கூறியிருந்தார்.

ஒரு குழந்தை பிறக்கும்போது, அதன் உடலில் இருக்கும் ஏதேனும் அடையாளம், அதன் முந்தைய ஜென்மத்தில் அது பெற்றதாக இருக்கும் என்பது ட்ரூஸ் இன மக்களின் நம்பிக்கை.

இது மூட நம்பிக்கை இல்லை என்று, அந்தக் குழந்தை வளர்ந்து பேசும் ஆற்றல் பெற்ற போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

முன்ஜென்மத்தில் என்னை சிலர் கோடாரியால் தாக்கிக் கொன்றுவிட்டார்கள் என்றும், தன்னைப் புதைத்த இடத்தைக் காட்டுவதாகவும் கூறி குடும்பத்தினரை ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தான் முன்ஜென்மத்தில் வாழ்ந்த கிராமத்துக்குச் சென்றதும் சிறுவனுக்கு அனைத்தும் நினைவில் வந்து, முன்ஜென்மத்தில் தனது பெயர் என எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். அந்த கிராமத்தினரும், சிறுவன் சொல்லும் பெயரில் இருந்தவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.

அப்போதுதான், அந்த சிறுவன், தன்னைக் கொன்றுவிட்டதாகவும், அவர்களை பெயர்களையும், யார் என்ற விவரத்தையும் கூறியுள்ளார். ஆனால், குற்றவாளிகள் தாங்கள் கொலை செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்கள். உடனே சிறுவன் தன்னைப் புதைத்த இடத்தைக் காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் காட்டிய இடத்தில் தோண்டியபோது, அங்கு ஒரு எலும்புக்கூட இருந்ததும், அதன் மண்டைஓட்டில் கோடாரியால் வெட்டிய தடயம் இருந்ததும், அதே அடையாளம், சிறுவனின் நெற்றியில் இருந்ததையும் பார்த்து கிராம மக்கள் ஆச்சரியம் அடைந்துள்னனர்.

உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான புத்தகம் ஒன்றும் வெளியாகியிருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.