PARKING இடம் இல்லாவிட்டால் கார் வாங்க முடியாது -அமலுக்கு வரும் புதிய விதி!

PARKING இடம் இல்லாவிட்டால் கார் வாங்க முடியாது என்ற புதிய விதி அமலுக்கு வருகிறது.
சென்னையில், பைக் மற்றும் கார் வாங்குவோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. அதனால் பைக் மற்றும் கார்களை நிறுத்த, போதுமான பார்க்கிங் வசதி இல்லை.இதனால், சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
இந்த பார்க்கிங் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், இனி கார் வாங்கினால், பார்க்கிங் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என விதிகளை வகுக்க, அரசுக்கு, சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
அதாவது ஒரு வாகனத்தைப் பதிவு செய்வதற்கு, பார்க்கிங் வசதி இருப்பதை அந்த உரிமையாளர் உறுதி செய்து அதற்கான ஆவணங்களையும் காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய விதி மூன்று மாதங்களில் இறுதி செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.