525 நாட்களுக்கு பின் விடுதலை! கடைசி அமெரிக்க பிணைக் கைதியை விடுவிக்கும் ஹமாஸ்

காசாவில் இருந்து கடைசி அமெரிக்க பிணைக் கைதி விடுதலை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க குடிமகன் விடுதலை
காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் 525 நாட்களாக பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க குடிமகன் ஈடன் அலெக்சாண்டர், இறுதியாக விடுதலை செய்யப்பட உள்ளார்.
காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அமெரிக்க குடிமகன் அலெக்சாண்டர் விடுவிக்கப்படுவதுடன், பிணைக் கைதிகள் நான்கு பேரின் உடல்களும் இஸ்ரேலிடம் திரும்ப ஒப்படைக்கப்பட உள்ளன.
நியூ ஜெர்சியை பூர்வீகமாக கொண்ட 21 வயதான ஈடன் அலெக்சாண்டர், கடந்த அக்டோபர் 7-ஆம் திகதி காசா எல்லைக்கு அருகே நடந்த கொடிய தாக்குதலின் போது ஹமாஸ் தீவிரவாதிகளால் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டார்.
LAST AMERICAN HOSTAGE TO BE FREED
Hamas has agreed to release Edan Alexander, the last known American hostage in Gaza, along with the bodies of four others.
Alexander, 21, was captured on October 7 while serving in the Israeli army near the Gaza border. Originally from New… pic.twitter.com/YWtxHWlDsw
— NEXTA (@nexta_tv) March 14, 2025
அவர் கல்லூரியில் உயர்கல்வி பயில்வதற்கு பதிலாக, இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) யில் சேர்ந்திருந்தார். இறுதியில் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தீவிரமடைந்த நிலையில், அலெக்சாண்டர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டார்.
பிணைக் கைதியின் தாய் வேதனை
அலெக்சாண்டர் தாயார் யேல், அவர் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்ட அதே நாளில் காலையில் கடைசியாக அவரிடம் பேசியுள்ளார்.
அப்போது அலெக்சாண்டர், “நான் பயங்கரமான விஷயங்களை பார்க்கிறேன், ஆனால் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்” என்று அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.