;
Athirady Tamil News

158 உக்ரேனிய ட்ரோன்களை ஒரே இரவில் தாக்கி அழித்த ரஷ்யா! இராணுவம் வெளியிட்ட அறிக்கை

0

ரஷ்ய இராணுவம் ஒரே இரவில் 158 உக்ரேனிய ட்ரோன்களை அழித்ததாக தெரிவித்துள்ளது.

158 ட்ரோன்கள்
உக்ரைன் கருங்கடல் மற்றும் ரஷ்யாவின் சில பிராந்தியங்களை நோக்கி ட்ரோன்களை ஏவியுள்ளது. அவற்றில் 158 ட்ரோன்களை ஒரே இரவில் ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளது.

இது குறித்து, ஆளுநர் யெவ்ஜெனி சோல்ன்ட்சேவ் கூறுகையில், “ரஷ்யாவின் கஜகஸ்தான் எல்லைக்கு வடக்கே ஓரன்பர்க் பகுதியில், வான் பாதுகாப்பு அமைப்புகள் ஒரு இராணுவ விமான தளத்தின் மீதான தாக்குதலை முறியடித்ததாகவும், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சேதம் எதுவும் இல்லை” என்றார்.

மேலும், அதிகாரிகள் சிலர் கூறும்போது உக்ரேனிய ட்ரோன்கள் இராணுவ தளங்கள் அல்லது அருகில் உள்ள இடங்களை குறிவைத்ததாக பாதுகாப்பு அமைச்சக கூட்டத்தில் தெரிவித்தனர்.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம்
அதேபோல், மொஸ்டாக் நகருக்கு அருகில் உள்ள ஒரு இராணுவ விமானநிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை குடியிருப்பாளர்கள் கண்டதாக அஸ்ட்ரா தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கிராஸ்னோடர், ரோஸ்டோவ், வோரோனேஜ் மற்றும் குர்ஸ்க் பகுதிகள் மற்றும் வடக்கு ஒசேஷியா குடியரசு மீது உக்ரேனிய ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின.

மேலும் பெல்கோரோட், பென்சா, சரடோவ், ஓரியோர்ல் மற்றும் ஸ்டாவ்ரோபோல் பகுதிகளிலும், கிரிமியாவிலும், கருங்கடல் மற்றும் அசோவ் கடல் மீதும் சிறிய எண்ணிக்கையிலான விமானங்கள் இடைமறிக்கப்பட்டன” என கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.