;
Athirady Tamil News

இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட ACMC ரிஷாத் கட்சி உறுப்பினர்கள்

0

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளப்பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அறிந்த தேசிய காங்கிரஸின் வீரமுணை வட்டார வேட்பாளர் ACM சஹீல் அவர்களை பார்வையிட தேசிய காங்கிரஸின் தலைவர் ALM அதாஉல்லாஹ் அவர்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஐயம் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு வெளியான சமூக வலைத்தளப்பதிவிற்கு சண்டை பிடிக்கும் போது கையில் வைத்திருந்தது துப்பாக்கி போல் தெரிகிறது. Npp அரசாங்கம் ஃநடவடிக்கை எடுக்குமா? என்ற கருத்து (comment) வெளியானமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.