யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார்.
சங்கிலியன் பூங்காவில் மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு, யாழ்ப்பாணம் மாநகர சபை வேட்பாளர் அறிமுக நிகழ்விலும் கலந்து கொண்டார்.
நிகழ்வில், கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி , க. இளங்குமரன்,எஸ் பவானந்தராஜா , யாழ் மாநகர சபை முதல்வர் வேட்பாளர் எஸ் கபிலன் , சக வேட்பாளர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.








