ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் (படங்கள்)

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், சமத்துவக் கட்சி தலைவர் முருகேசு சந்திரகுமார், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தன், புளொட் யாழ் மாவட்ட்ப்ப பொறுப்பாளர் கஜதீபன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதுடன் வேட்பாளர்களும் பங்கேற்றனர்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாவட்டத்தில் உள்ள மாநகரசபை, நகரசபைகள், பிரதேச சபைகளில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் *சங்கு சின்னத்தில்* போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
https://youtu.be/07vJe59jSrs?si=omNGXtl8JFl5SLph